சிபிஎல் தொடரில் செயின்ட் லூயிஸ் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 120 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா அணி அபார வெற்றி பெற்றது .
கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தல்லாவாஸ்- செயின்ட் லூயிஸ் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜமைக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. இதில் அதிரடி விளையாடிய அந்த்ரே ரஸல் 14 பந்துகளில் 6 சிக்சர் , 3 பவுண்டரிகளை அடித்து விளாசி அரை சதம் கடந்தார். இதையடுத்து தொடக்க வீரரான சாத்விக் வால்டன் 47 ரன்களும் , கென்னர் லீவிஸ் 48 ரன்களும் மற்றும் ஹைதர் அலி 45 ரன்களும் எடுத்தனர் .இதன்பிறகு களமிறங்கிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 256 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.
இதில் அதிகபட்சமாக டிம் டேவிட் 56 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .இதனால் 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் 120 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா அணி அபார வெற்றி பெற்றது. இதுவரை நடந்த போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் எந்தஒரு அணியும் வெற்றி பெற்றது இல்லை. இந்த வெற்றியின் மூலம் சிபிஎல் தொடரில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சிறப்பை ஜமைக்கா அணி பெற்றுள்ளது.