Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டை மிரட்ட வரும் சிபிஎல் நாயகர்கள்….!!

ஆப்கானிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பிராண்டன் கிங், ஹய்டன் வால்ஷ் ஜூனியர் ஆகியோர் அறிமுகமாகவுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று டி20, மூன்று ஒருநாள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான கீரோன் பொல்லார்ட் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு மீண்டும் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார்.

மேலும் இந்தாண்டிற்கான கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் அதிக ரன் குவித்தவரான பிராண்டன் கிங் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரான ஹய்டன் வால்ஸ் ஜூனியர் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20க்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் தங்களது முதல் சர்வதேச போட்டியில் விளையாடவுள்ளனர்.வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான கிரிஸ் கெய்ல் இந்த தொடருக்கான அணியில் இடம்பிடிக்கவில்லை. அவருக்கு பதிலாக லிண்டல் சிம்மன்ஸ் டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் கடைசியாக 2017ஆம் ஆண்டுதான் அணியில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி,

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: கீரோன் பொல்லார்ட் (கே), நிக்கோலஸ் பூரன், எவின் லூயிஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், பிராண்டன் கிங், ஃபபியன் ஆலன், ஜேசன் ஹோல்டர், ஹய்டன் வால்ஷ் ஜூனியர், லெண்டல் சிம்மன்ஸ், கேரி பியர், ஷெல்டன் கோட்ரெல், தினேஷ் ராம்டின், கெஸ்ரிக் வில்லியம்ஸ், அல்சாரி ஜோசப்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: கீரோன் பொல்லார்ட் (கே), ஷாய் ஹோப், எவின் லூயிஸ், சிம்ரான் ஹெட்மியர், சுனில் ஆம்ப்ரிஸ், நிக்கோலஸ் பூரன், பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், ஹய்டன் வால்ஷ் ஜூனியர், கேரி பியர், ஷெல்டன் கோட்ரெல், கீமோ பால், அல்சாரி ஜோசப், ரொமாரியோ ஷெப்பர்ட்.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி: ஜேசன் ஹோல்டர் (கே), ஷாய் ஹோப், ஜான் காம்ப்பெல், கிரெக் பிராத்வைட், ஷிம்ரான் ஹெட்மியர், ஷம்ரா ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஷேன் டோவ்ரிச், சுனில் ஆம்ப்ரிஸ், ஜோமல் வாரிகன், ராகீம் கார்ன்வால், கீமார் ரோச், கீமோ பால், அல்சாரி ஜோசப்.

Categories

Tech |