தெலுங்கானா மாநிலத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் சுட்டு கொல்லப்பட்டது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 27ஆம் தேதி இரவு பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த நான்கு பேரும் பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அதிகாலை பெண் எரித்துக் கொல்லப்பட்ட இடத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இதற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு சட்டப்படி தகுந்த தண்டனையை வாங்கிக் கொடுத்து இருக்க வேண்டும் அதை விடுத்து விட்டு இப்படி சட்டத்தை கையிலெடுத்து என்கவுண்டர் செய்வது தவறாக பார்க்கப்படுகிறது. இது சரியானதாக இருக்காது என்று தெரிவித்தார்.
மேலும் காவல்துறையின் கூற்றுப்படி அவர்கள் தப்பி ஓட முயன்ற போதுதான் துப்பாக்கியால் சுட்டோம் என்று கூறுகிறார்கள் ஆனால் தப்பி ஓடும் பொழுது கையிலோ அல்லது காலிலோ சுட்டு இருக்கலாம். 4 பேரையும் என்கவுண்டர் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஏன் மக்கள் நடமாட்டமில்லாத நேரமான அதிகாலை 5 மணிக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்றெல்லாம் கேள்வி எழுப்பியவர்,
இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இவ்வாறு எல்லாம் நான் கூறுவது குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கக் கூடாது என்பதற்காக அல்ல இது போன்ற சட்ட விரோதமான தண்டனை அல்லாமல் முறைப்படி அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக கூறுகிறேன் என்று தெரிவித்தார்.