கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெரிய கட்டுமான கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததில் பல பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் கெலவ்னா என்ற நகரத்தில் 25 மாடி கொண்ட கட்டிடத்தில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அதற்காக மிகப் பெரிய கிரேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று அந்த கிரேன் சரிந்து விழுந்து விட்டது.
இதில் பலர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை எத்தனை நபர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவம் தொடர்பில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் கட்டிடத்தை மேல் எழுப்புவதற்கு உபயோகப்படுத்தப்பட்ட கிரேனின் உயரமான பகுதி அங்கேயே மாட்டி தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.
இதனால் அருகில் இருக்கும் பிற கட்டிடங்களும் பாதிப்படைந்திருக்கிறது. எனவே அந்த இடத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கட்டிடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.