Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி….. +2 மாணவன் பலி….. திருவள்ளூர் அருகே சோகம்….!!

திருவள்ளூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம்  மோதிய விபத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர். அதே மாவட்டம் சோழவரம் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் பாலாஜி. இவர்கள் இருவரும் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்காக வைட்டமின்-சி குறைபாடு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட இருவரும் போட்டியில் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து இருவரும் மோதினர்.

இதில் சுரேந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, காயமடைந்த  பாலாஜியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின் இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சுரேந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |