தண்ணீர் பஞ்சத்தை போக்க மக்கள் அதிக மரம் நட வேண்டும் என்று அமைச்சர் எஸ்பி வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் இது குறித்து வெளியீட்டுள்ள அறிக்கையில் குடிநீர் பிரச்சனையை போக்க கோரி ஜூன் 22-ஆம் தேதி முதல் மாவட்டம் வாரியாக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் அதிமுக சார்பிலும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது .
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ் பி வேலுமணி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது, தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கு மழை மிகவும் அவசியம் என்றும் மழை அதிகமாக பொழிய வேண்டும் என்றால் மக்கள் அதிக அளவில் மரங்களை நட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி அறிவுரை கூறியுள்ளார்.