பாபநாசம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
மலையாளத் திரையுலகில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். இத்திரைப்படத்தின் முதல் பாகத்தினை பல மொழிகளில் ரீமேக் செய்தனர். அதேபோல் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்து வருகின்றனர்.
திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல் மற்றும் கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். அதே போல் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இயக்குனர் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் தமிழ் ரீமேக் செய்வேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் தற்போது கமல்ஹாசன் இந்தியன்2 மற்றும் விக்ரம் படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளதால் பாபநாசம் 2 படத்தில் அவரால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்படத்தில் ஒரே மாதத்தில் நடித்து முடித்து விடலாம் என்பதால் இதுகுறித்து கமல் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.