Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கிரெடிட் கார்ட் கிளைம் ரிவார்டு…. வங்கியிலிருந்து வந்த ஃபோன் கால்…. பண மோசடி….!!!

கரூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரி என்று கூறி பண மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறது.

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். நாகராஜன் ஆர் பி எல்  மற்றும் எஸ்பிஐ போன்ற வங்கிகளில் கிரெடிட் கார்டுகளை உபயோகித்து வருகிறார். மேலும் ஆர்பிஎல் வங்கி தலைமை அதிகாரி என்று போனில்  மர்மநபர் ஒருவர் ஏப்ரல் 12ஆம் தேதி செல்போன் மூலம் நாகராஜனை தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆகையால் நாகராஜான் வங்கி அதிகாரி என்று நினைத்து அவரிடம் பேசியபோது தன்னை முருகன் என்று நாகராஜனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் நாகர்ராஜான் கிரிடிட் கார்டுகளை அதிக அளவில் பயன்படுத்தியாதல்  கிளைம் செயல்படாமல் இருப்பதால் ரிவார்டு புள்ளிகள் அதிகமாக காணப்படுவதாகவும் அதனை தற்போது பணமாக மாற்றும் சலுகை வங்கியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு சில வழிமுறைகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.மேலும் நாகராஜன் பணம் கிடைக்கும் என்று எண்ணி அவர் கேட்கும் கிரெடிட் கார்டி விவரங்கள் அனைத்தையும் மற்றும் தனது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணையும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாகராஜன் போனில் அதிகாரியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவரின் போனிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில் ரூ. 26,882, ரூ. 6,050 என மொத்தம் ரூ. 32,932 பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதன்பிறகு சில நொடிகளிலேயே பேசிக்கொண்டிருந்த அதிகாரியின் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் அருகிலிருந்த வாங்கல் காவல் நிலையத்தில் நடந்ததைக் கூறி புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல முறை காவல்துறை மற்றும் வங்கி துறையில் இருந்து மக்களுக்கு இது போன்ற போலியான செயல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்த நிலையிலும் தனது செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை யாரிடமும் கூறக்கூடாது என்பது குறித்த வலியுறுத்தப்பட்ட நிலையிலும் இவ்வாறு நடந்திருப்பது அனைவரிடத்திலும் பெரும் அதிருப்தியை  ஏற்படுத்தியது.

Categories

Tech |