Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிரெடிட் கார்டு மூலம் கடன்….. நியாயமான முறையில் USE பண்ணிக்கோங்க….. கலெக்டர் அட்வைஸ்…..!!

திருவாரூரில் பாரத பிரதமரின் கிசான் கிரடிட் கார்ட் திட்டத்தின் மூலம் கடன் உதவிகளை பெற்று பயன் பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரதப்  பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு கிசான் கிரடிட் கார்டு என்னும் உழவர் கடன் அட்டையின் மூலம் கடன் பெறும் வசதியும், ஆண்டிற்கு ரூபாய் 6000 நிதி உதவியும் வழங்கப்படும். அந்த வகையில்,

இதனை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சேமிப்பு கணக்கு உள்ள வங்கிக் கிளையை அணுகியும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகியும்  உழவர் கடன் அட்டையை பெற்று மானிய சலுகைகளுடன் கடன் பெறலாம் என்றும்,

ஏற்கனவே உழவர் கடன் அட்டை வைத்திருப்போர் கடனுக்கான வரம்பை உயர்த்தி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை சமர்ப்பிப்பதற்கு முன் வேறு எந்த வங்கிகளிலும் உழவர் கடன் அட்டை பெறவில்லை என்பதை பிரமாணம் செய்து சமர்ப்பித்த பின் தயவு தாட்சயமின்றி தகுதியுள்ள விவசாயிகள் பயன்பெறலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, பொது சேவை மையங்கள் மூலமும் இதனை விண்ணப்பிக்கலாம் என்றும், தகுதி உள்ள  அனைவரும் இதனை முறையாக பயன்படுத்தி கொள்ளவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |