Categories
தேசிய செய்திகள்

CREDIT CARD, DEBIT CARD இருக்கா?…. செப்டம்பர் 30ஆம் தேதி வரை….. வெளியான மிக முக்கிய….!!!!

தற்போது பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடைகள்  மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு கூட நெட் பேங்கிங் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நீங்கள் ஏதாவது ஒரு முறை உங்களது கார்டு விவரங்களை உள்ளிட்டு பொருட்கள் வாங்கினால் உங்களின் விவரங்கள் அனைத்தும் தானாக சேமிக்கப்படும்.

அடுத்த முறை நீங்கள் பணம் செலுத்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரத்தை பதிவிட வேண்டிய அவசியம் இருக்காது. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மோசடிகளை தடுக்கும் நோக்கத்தில் கூகுள் பே, போன்பே, நெட்ப்ளிக்ஸ் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் கிரீட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த விதிகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கூறியது.

இந்நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு டிஜிட்டல் டோக்கன் முறை செப்டம்பர் 30ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைப்படி இந்தியாவிற்குள் ஆன்லைன் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் காடு நம்பர், தேதி மற்றும் வங்கியின் பெயர் என எந்த தகவலையும் ஆன்லைன் நிறுவனங்கள் சேமிக்க கூடாது. இதற்கு பதிலாக டிஜிட்டல் டோக்கன் ஒன்று வழங்கப்படும். ஆன்லைன் மோசடிகளை தடுக்க இந்த முறை கொண்டு வரப்படுகிறது.

Categories

Tech |