கடந்த சில மாதங்களுக்கு முன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான விதிகள், ஆன்லைன் பண பரிவர்த்தனை வரம்புகள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும் என வெளியிட்டது. இந்நிலையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆன்லைன் மோசடிகள் நடப்பதை தடுக்கும் வகையில் கார்டு ஆன் பைல் டோக்கனேசேஷன் என்ற புதிய விதிமுறை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன் மூலம் ஆன்லைன் ஸ்டோர்கள், பணப்பரிமாற்ற செயலிகள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆகியவை வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பற்றிய தனிப்பட்ட தகவல்களை எந்த வகையிலும் சேமிக்க முடியாது. டோக்கனேசேஷன் முறையை பயன்படுத்துவது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் குறித்த தகவல்களை பாதுகாக்க உதவுகிறது.