இந்தியாவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஏடிஎம் இயந்திரங்களில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பொதுவாக ஏடிஎம் மையங்களில் ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள் அதே வங்கியின் ஏடிஎம் வழியாக பணப் பரிவர்த்தனை செய்வதற்கு 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். இதைத்தாண்டி பணம் எடுக்கும் பொழுது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப்படும். இந்நிலையில் ஏடிஎம் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி ஒரு வங்கியின் வாடிக்கையாளர் வேறு வங்கியின் ஏடிஎம் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொழுது, வசூலிக்கப்படும் கட்டணம் 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பிற வங்கி ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் பொழுது அல்லது பணம் அல்லாத பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொழுது அந்த வங்கிக்கு வாடிக்கையாளர்களின் வங்கி செலுத்தும் கட்டணம் தான் இன்டர்சேஞ்ச் கட்டணம் ஆகும். இந்த கட்டண உயர்வு ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வரும்.