30 நிமிடத்தில் பேங்க் ஆப் பரோடா கடன் ஒப்புதல் தரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியான பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதியை கொண்டு வந்துள்ளது. அதுவும் டிஜிட்டல் வழியில் கடன்களுக்கான ஒப்புதலை வழங்குவதற்கு ஒரு புதிய தளத்தை உருவாக்கி உள்ளது. இதன் மூலமாக விரைவில் கடன் ஒப்புதல் வழங்க முடியும். வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை வாங்குவதற்கு மிக சிரமப் படுவதால் டிஜிட்டல் முறையில் ஒப்புதல் வசதியை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் விக்ரமாதித்யா கூறியுள்ளார்.
ரீடைல் ஷாப்பிங் செய்வதற்கும், பேங்க் ஆப் பரோடா வங்கியில் வாடிக்கையாளர்கள் நுண் தனிநபர் கடனை வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் 60 நொடிகளில் கடன் பெறுமாறு இந்த முறையை செய்து வைத்துள்ளது. இதில் வாங்கும் கடனை 3 மாதம் முதல் 18 மாதம் வரையில் வாடிக்கையாளர்கள் இஎம்ஐ மூலம் செலுத்த முடியும். இந்த புதிய வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் வாகன கடன், தனிநபர் கடன், வீட்டுக் கடன் ஆகிவற்றை பெற முடியும்.
இதனை வெறும் 30 நிமிடத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த விவரங்கள் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்பட்ட கடன் ஒப்புதல் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் நிலையான வைப்புத் தொகையின் கீழ் சேமிக்கும் வாடிக்கையாளர்கள் விரைவில் இதன் மூலம் கடன் பெற முடியும் என்று பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. கொரோனாவை தொடர்ந்து வங்கியில் நீண்ட நேரம் காத்து கிடக்கும் சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த வசதி கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.