பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரரான ஸஃபார் சர்ஃபராஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடது கை பேட்ஸ்மேனான இவர் இதுவரை 15 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி சில சாதனைகளையும் புரிந்துள்ளார். பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியில் முக்கிய வீரரான இவர், 1994 இல் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்துவிட்டு தற்போது கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.