ஆஸ்திரேலியா அணியின் மிகச்சிறந்த வீரரான டேவிட் வார்னர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி இந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். வார்னருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய டேவிட் வார்னர் மனைவி கேண்டிஸ்,
“நாங்கள் வீட்டின் பின்புறம் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடுவோம். அப்போது எனது குழந்தைகள் அப்பாவை போல் விளையாட வேண்டும் என்பர். ஆனால் இரண்டாவது மகள் இண்டி ரே மட்டும் இந்திய அணி கேப்டன் விராட்கோலி போல் வரவேண்டும் என்பார். இண்டிக்கு கோலியை தான் அதிகம் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.