டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் எந்த இடத்திலும் இறங்கி அடிக்க தயார் என மேற்கிந்திய தீவு அணியில் இடம் பிடித்த வீரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என இரு தொடர்களையும் விளையாடவுள்ளது . இதனைத் தொடர்ந்து ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடிய கெயிலுக்கு மேற்கிந்திய தீவில் விளையாட இடம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து கெய்ல் கூறியதாவது சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என எதுவாக இருந்தாலும் சிறப்பாக விளையாடுவேன் என்றும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அணில் கும்ப்ளே தன்னை மூன்றாவதாக இறங்கி விளையாட வைத்தார் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த அணியில் முதலில் களமிறங்கிய அகர்வால் மற்றும் ராகுல் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து மூன்றாவதாக என்னை விளையாட வைத்து தன் அனுபவத்தை பயன்படுத்தி கொண்டார்கள் என்று கூறிய கெய்ல் தான் எந்த இடத்திலும் இறங்கி அடிக்க தயார் என தெரிவித்துள்ளார்.