பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘தனாஜி தி அன்சங் வாரியர்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அஜய் தேவ்கன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து நட்பு பாராட்டினார்.
இந்தச் சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள நடிகர் அஜய் தேவ்கன் கூடவே, ‘கிரிக்கெட், திரைப்படங்கள் நம் நாட்டின் ஒரே மதம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவை தோனி, அஜய் தேவ்கன் ரசிகர்கள் விரும்பியுள்ளதோடு, இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
Cricket and Films … the uniting religion of our country @msdhoni pic.twitter.com/yMlEBKZk63
— Ajay Devgn (@ajaydevgn) January 9, 2020