முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் கொலை மிரட்டல் விடுப்பதாக கிரிக்கெட் சங்க தலைவர் தேவேந்திர ஸ்ருதி புகார் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் தற்போது குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டத்தின் (Vadodara) கிரிக்கெட் சங்க ஆலோசகராகப் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வடோதரா கிரிக்கெட் சங்க தலைவர் தேவேந்திர ஸ்ருதி என்பவர் முனாப் படேல் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஒரு அதிர்ச்சி புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில், ”நான் சங்கத்தில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்ததால் தன்னை கொன்று விடுவதாகவும், தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு முனாப் படேல் தான் காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஸ்ருதியின் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து முனாஃப் படேல் கூறியதாவது, ”தேர்வுக்குழுவில் அவருக்கு பிரச்சனை இருக்கிறது. நான் அணியில் ஒரு ஆலோசகர் தான் மற்றபடி எனக்கும் சங்கத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளார்.