Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களிடையே விழிப்புணர்வு…. பரபரப்பான கிரிக்கெட் போட்டி… துவங்கி வைத்த அதிகாரிகள்….!!

இளைஞர்களிடையே 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வகையில் கிரிக்கெட் போட்டியை அதிகாரிகள் துவங்கி வைத்துள்ளனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்தியநாதன் இளைஞர்களிடம் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த போட்டியில் பொள்ளாச்சி பகுதியில் உள்ள 17 அணிகள் கலந்து கொண்டு பத்து ஓவர் கொண்ட போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட உள்ளன. இதில் தேர்தல் நடத்தும் அதிகாரி தணிகைவேல், கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ். தனி தாசில்தார் காந்திமதி போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |