Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் என்றாலே நாங்க தான்…. தோனியால் எல்லாம் மாறிடுச்சு….. முன்னாள் கேப்டன் கருத்து….!!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் , உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். உதாரணமாக கூற வேண்டுமெனில் , தோனி இந்தியாவுக்காக இறுதியாக விளையாடிய உலக கோப்பை போட்டியில், அவர் தோற்கடிக்கப்படும் போது மைதானத்தில் இருந்த எதிரணிக்கு ஆதரவு அளித்த ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த வீடியோக்களை இப்போது பார்த்தாலும் கூட தெளிவாக காணலாம். உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருக்கக்கூடிய தோனி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், தோனியை முதல் ஆட்டத்தில் இருந்து பார்க்கிறேன். திடீரென ஒரு போட்டியில் சதமடித்தார் அவர்மேல் அனைவரது கவனமும் சென்றது. பிறகு புதுப்புது யுக்திகளை கையாள திடீரென ஆஸ்திரேலியா வசமிருந்த கிரிக்கெட் உலகை மாற்றி இந்தியாவின் பக்கம் எடுத்துச் சென்றார். இத்தனைக்கும் அவர் எளிமையானவர், கிரிக்கெட் உலகை மாற்றியவர் தோனி என குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |