Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் ஜாம்பவானான கபில் தேவை மிரளவைத்த அணி தலைவர் யார் தெரியுமா..?

இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளரான கபில் தேவை மிரளவைத்த இந்திய அணி தலைவர்.

இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு சகலதுறை என போற்றப்படுபவர் கபில்தேவ். இந்திய அணியை திறம்பட வழிநடத்திய அணித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்பவர். இங்கிலாந்தில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் கோப்பை தொடரில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்த கபில்தேவ் அவருடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் நினைவுகளை அண்மையில் பகிர்ந்துகொண்டார்.

 

அதில்,”1978-79 ல் முதல்முறையாக இந்திய அணிக்காக விளையாட வந்தேன். எனக்கு மூத்த கிரிக்கெட் வீரரான வெங்கடராகவன் பார்த்தாலே மிரண்டு போய் ஓடி ஒளிந்து கொள்வேன்” எனக் கூறியுள்ளார். இந்திய அணியின் தலைவராக வெங்கட்ராகவன் இருந்த நாட்கள் எனக்கு மிகவும் கடினமான நாட்களாகவே இருந்தது என்று தெரிவித்துள்ளார். அவர் அம்பயராக ஆக செயல்பட்ட போதும் பவுலர்களிடம் கடிந்துக் கொள்வார் எனவும் கபில்தேவ் கூறியுள்ளார்.

Categories

Tech |