Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடைபெற்ற கிரிகெட் போட்டி… அணிகளுக்கு இடையே வாக்குவாதம்… 9 பேர் மீது வழக்குபதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிரிகெட் விளையாடி கொண்டிருக்கும் போது இரண்டு அணிகளுக்கும் நடந்த தகராறில் 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கிராமத்தில் கிரிகெட் போட்டி நடந்து வந்துள்ளது. இந்நிலையில்  நேற்று நடைபெற்ற போட்டியில் அண்ணா குடியிருப்பு அணியினருக்கு எதிராக சத்தக்கோன்வலசை அணியினர் விளையாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து விளையாடி கொண்டிருந்த 2 அணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது வினோத்(20) என்பவர் கோபி கிருஷ்ணனை கிரிகெட் மட்டையால் தலையில் அடித்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் பால கிருஷ்ணனை மிட்டு சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மண்டபம் காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட வினோத், முனீஸ்வரன், கார்த்திக், சரவணன் உட்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |