Categories
பல்சுவை

கிரிக்கெட் பயிற்சி வீரர் தற்கொலை…வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மலாடில் மும்பை கிரிக்கெட் பயிற்சி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மலாடை சேர்ந்த கரண் திவாரி(27) என்பவர்  மும்பை ரஞ்சி அணியின் வீரர்களுக்கு வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக இருந்து வந்துள்ளார். மும்பை சீனியர் அணியில் இடம் பெறுவதற்கு  நீண்ட காலமாக முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் அணியில்அவருக்கு  இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கரண் திவாரி சில நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் வசிக்கும் தனது நண்பரை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது கிரிக்கெட் அணியில் விளையாட எனது பெயர் சேர்க்கப்படாததால் கடும் மனஉளைச்சலில் உள்ளதாகவும், அதனால் தனது வாழ்க்கையை முடித்து கொள்ள போவதாகவும் கூறி இருக்கிறார்.
உடனே அவரது நண்பர் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் சமாதானம் அடையாத கரண் திவாரி உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர் சம்பவம்பற்றி  கரண் திவாரியின் தாய்க்கு தகவல்அளித்துள்ளார். உடனே பதறி போன தாய் அவரது அறை கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு கரண் திவாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன் பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குரார் காவல்துறையினர்  உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். இந்த சம்பவம் மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட டி.வி. நடிகர் ஜித்து வர்மா கரண் திவாரியின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |