Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் வெற்றி…. “தனிப்பட்ட பங்களிப்பே காரணம்” வாழ்த்து ட்விட் போட்ட மு.க ஸ்டாலின்….!!

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணியின் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து மு.க. ஸ்டாலின் ட்வீட்  செய்துள்ளார்.

பிரிஸ்பேனில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு  இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இப்போட்டியை இந்திய அணி 2-1 என கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. அடிலைட் பகுதியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணி இந்த போட்டியில்  ஒயிட்வாஷ் என்று கிண்டல் செய்தார். ஆனால்  தங்களை விமர்சனம் செய்தவர்கள் அனைவருக்கும் வாயடைத்து போகும் படி இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று இந்திய அணி வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். மேலும் வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் திமுக தலைவர் மு க ஸ்டாலினும் இந்திய அணிவீரர்களை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,” ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட பங்களிப்புடன் விளையாடியதால் மட்டுமே இப்போட்டியில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இளம் கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |