Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் உலகில் புதிய சாதனை… இவருக்கு என்ன ஒரு திறமை… சொல்ல வார்த்தையே இல்ல…!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் இதுவரை இல்லாத அளவிற்கு அஸ்வின் புதிய சாதனை படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிகெட் வீரரான அஸ்வின் மிகவும் புகழ்பெற்ற பந்து வீச்சாளர் ஆவார் . இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி,இந்திய வீரர்களில் வரலாற்று புதிய சாதனை படைப்பார் என சொல்லப்படுகிறது.

இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 2  டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தலாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வரையும் 2வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து அவர் விளையாடிய இரண்டாவது போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார்.

அவர் விளையாடிய 76 டெஸ்ட் போட்டிகளில் 394 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதே போல் அவர் ஒரு இன்னிங்சில் 59 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியது ,அவரின் சிறந்த பந்து வீச்சாளர்  திறமையை காட்டுகிறது. தற்போது அகமதாபாத்தில் இரவு ,பகலாக நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் 400 விக்கெட் பெற்ற சாதனை படைக்க அவருக்கு 6 விக்கெட் தேவைப்படுகிறது.

இதனால்  இந்தப்போட்டியில் விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றி பெறுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர்களின் கும்ப்ளே (619 )விக்கெட்டும், கபில்தேவ் (434) மற்றும் ஹர்பஜன் சிங் (417) விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக அஸ்வின் இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கும்ப்ளே 85 டெஸ்ட்களிலும், கபில்தேவ் 111 மற்றும் ஹர்பஜன்சிங் 96 டெஸ்ட்களிலும் 400 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால் அஸ்வின் தனது 77வது டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ,இதனால் இவர் ஒரு புதிய சாதனை படைப்பார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |