சென்னை அணிக்கு முதலில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்படவில்லை என்று கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்..
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஆரம்பம் முதல் தற்போது வரை அணிக்கு வெற்றிகரமாக இருந்து வருபவர் தல என்று அழைக்கப்படும் கேப்டன் தோனி.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் இதுவரை 3 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது..
அதுமட்டுமில்லை பங்கு பெற்ற அனைத்து தொடர்களிலும் பிளேஆப் சுற்று வரை அணியை அழைத்துச் சென்றவர் தோனி.. மேலும் உலகளவில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகவும் ரசிகர்கள் கூட்டத்திற்கு காரணமாகவும் இருப்பவர் தான் தல தோனி என்று சொன்னால் அது மிகையல்ல..
இந்த நிலையில் சென்னை அணிக்கு முதலில் கேப்டனாக தேர்வு செய்யப்பட வேண்டிய வீரர் தோனி கிடையாது என்றும், மற்றொரு வீரருக்கு பதிலாக தான் தோனி தேர்வு செய்யப்பட்டார் என்றும் சென்னை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்த சுப்பிரமணியம் பத்திரிநாத் தெரிவித்துள்ளார்.. சென்னை அணிக்காக சில சீசன்களில் இவர் விளையாடியிருக்கிறார்..
இதுபற்றி அவர் கூறுகையில், 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக தோனியை வாங்குவதற்கு சிஎஸ்கே அணி முயற்சி செய்யவில்லை.. சென்னை அணியின் கேப்டனாக வீரேந்தர் சேவாக்கை வாங்கவே முயன்றது.. ஆனால் சச்சின், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோர் தங்களது சொந்த அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்திருந்தனர்..
அதேபோல சேவாக்கும் தனது சொந்த அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்த காரணத்தால் டெல்லி அணிக்காக அவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு விட்டார்.. இதனால் சிஎஸ்கே அணிக்கு நட்சத்திர வீரர் ஒருவரை கேப்டனாக தேர்வு செய்ய முயன்றனர்.. அந்த வகையில் 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது..
இதனால் இந்திய அணியின் கேப்டனான தோனியை சென்னை அணி வாங்கியது.. அப்படித்தான் தோனி சென்னை அணிக்கு கேப்டனாக மாறினார்.. அதன்பின் தற்போது சிஎஸ்கே அணியின் ஒரு மிகப்பெரிய முகமாகவே தோனி மாறியுள்ளது பெருமையாக இருக்கிறது என்று பத்ரிநாத் கூறியுள்ளார்..