Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

“கிறிஸ் கெய்ல் போட்டோவுடன் பதிவு” திருடன் என விமர்சிக்கப்பட்ட மல்லையா..!!

கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ட்விட்டரில் போட்டோ பதிவு செய்ததையடுத்து  விஜய் மல்லையா திருடன் என விமர்சிக்கப்பட்டார். 

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர்  விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா லண்டன் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், ஐபிஎல் அணியில் தான் விளையாடிய பெங்களூரு அணியின் உரிமையாளரான விஜய் மல்லையாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அத்துடன் பிக் பாஸ் உடன் சிறந்த சந்திப்பு என்றும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு பலரும் விஜய் மல்லையாவை விமர்சனம் செய்து திருடன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் .

இதையடுத்து கெய்ல் பதிவினை பலரும் விமர்சனம் செய்ததால் கடுப்பான விஜய் மல்லையா, கெய்ல் பதிவை டேக் செய்து, எனது அருமை நண்பர் யுனிவர்ஸ் பாஸ் உடன் ஒரு சிறந்த சந்திப்பு. என்னை திருடன் என்று அனைவரும் விமர்சிக்கின்றனர். நான் கொடுக்க வேண்டிய பணத்தை முழுமையாக கொடுப்பதற்கு கடந்த ஓராண்டாக தயாராக இருக்கிறேன். நான் தரும் பணத்தை உங்கள் வங்கியை பெற்றுகொள்ளச் சொல்லுங்கள். “அப்புறம் முடிவு செய்யுங்கள் யார் திருடன் என்று” மல்லையா டென்ஷனாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |