பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கிரிக்கெட்டில் ‘பேட்ஸ்மேன் ‘என்ற சொல்லுக்கு பதிலாக ‘பேட்டர்’ என்ற சொல்லை எம்சிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் விதிமுறைகளை வகுப்பதில் எம்சிசி எனப்படும் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் முக்கிய பங்காக விளங்குகிறது .இவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் ஐசிசி கிரிக்கெட் விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றது .இதில் சமீபகாலமாகவே மகளிர் கிரிக்கெட் அதிக முன்னேற்றம் கண்டு வருகிறது .குறிப்பாக 2017 உலக கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின .இந்த போட்டி நடந்த லார்ட்ஸ் மைதானத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகளவு காணப்பட்டது .இதையடுத்து டி20 உலக கோப்பை இறுதி சுற்று போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின.இப்போட்டி நடந்த மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 86 , 174 ரசிகர்கள் வருகை தந்தனர்.
இந்த நிலையில் பொதுவாக கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் என்ற சொல் ஆண்களை மட்டும் குறிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் சில ஆங்கில ஊடகங்களில் பேட்ஸ்மேன் என்ற சொல்லுக்கு பதிலாக பேட்டர் என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கிரிக்கெட்டில் ‘பேட்ஸ்மேன், பேட்ஸ்வுமென்’ என்ற சொற்களுக்கு பதிலாக ‘பேட்டர், பேட்டர்ஸ்’ என்ற சொற்களை ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் பயன்படுத்த வேண்டும் என்று எம்சிசி மாற்றம் கொண்டு வந்துள்ளது. மேலும் பாலின சமத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கிரிக்கெட் சொற்களை பயன்படுத்தும்போது அது அனைவருக்கும் பொதுவானதாக மாறுகிறது என மாற்றம் குறித்து எம்சிசி கருத்து தெரிவித்துள்ளது.