மலேசியாவில் 9 ஆண்டுகள் பிரதமராக இருந்த நஜீப் ரசாக் கடந்த 2018ஆம் ஆண்டு ஊழல் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதையடுத்து தற்போது அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் கடந்த 9 ஆண்டுகளாக நஜிப் ரசாக் என்பவர் பிரதமராக இருந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 75 கோடி ரூபாயை ஊழல் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு கோலாலம்பூர் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்ததையடுத்து நீதிபதிகள் நஜிப்பிற்கு ஊழல் செய்த குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்கள். இதனையடுத்து மலேசியாவில் 9 ஆண்டுகள் பிரதமராக இருந்த நஜீப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தனக்கான மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் நஜிப்பின் மனுத்தாக்கலை விசாரணை செய்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்கள். ஆகையினால் நஜிப்பிற்கு கோலாலம்பூர் ஹைகோர்ட் விதித்த 12 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.