ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகள் தமிழ்நாடு , மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு அனைத்தையும் ஒரே வழக்காக எடுத்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர்கள் , சமூக வலைதளங்கள் அதிக நபர்கள் நல்ல நோக்கத்தில் தான் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் கருத்துக்கள் எளிதாக , முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல இது ஒரு வழிகாட்டியாக உள்ளது.
மேலும் சமூக வலைதளங்களில் எந்த ஒரு பிரச்சினை ஏற்படுவது கிடையாது என்று வாதங்களை முன்வைத்தார். இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் ப்ளூவேல் கேமில் எடுத்ததை போல இதன் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். அதற்க்கு நீதிமன்றம் தனிப்பட்ட ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா? என்ற கேள்வி எழுப்பியதோடு இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கில் விசாரணையை செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.