Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒருவர் தேடப்படும் குற்றவாளி….. யாரும் அப்ரூவல் ஆகவில்லை…. சிபிசிஐடி பரபரப்பு தகவல் …!!

சிபிசிஐடி போலீசார் காவலர் முத்துராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருக்கின்றார்கள்.

சிபிசிஐடி விசாரணை தொடங்கிய பிறகு இரண்டு நாட்களிலேயே வழக்கில் சம்பந்தமுடைய நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமை காவலர் முருகன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கனேஷ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்படுளர்கள்.  இவர்களுக்கு வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதல் தகவலாக இன்று நேற்று சம்மந்தப்பட்ட காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அதை சிபிசிஐடி போலீசார் மறுத்திருக்கிறார்.

சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் கூறும் போது, தேடப்படும் குற்றவாளியாக காவலர் முத்துராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.காவலர் முத்துராஜாவை கைது செய்ததற்காக தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில், மாவட்ட எல்லைகளில், உறவினர் வீடுகளில் தேடும் பணியை தொடங்கி இருக்கிறோம். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை சென்கின்றார் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

அதேபோல மற்றொரு முக்கிய விஷயத்தை சிபிசிஐடி போலீசார்  தெரிவித்திருக்கின்றார். அதில் சிபிசிஐடி போலீஸிடம் யாரும் அப்ரூவராக மாறவில்லை… அப்ரூவராக மாறியுள்ளார் என்ற தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார். காவல்நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐ பால்துரை சிபிசிஐடியிடம் அப்ரூவலாக மாறி இருப்பதாகவும், அதே போல காவலர் முத்துராஜ்_ஜூம் அப்ரூவலாகியுள்ளார் என்ற செய்தி நேற்று வந்த நிலையில் தற்போது சிபிசிஐடி  அதனை மறுத்து காவலர்  முத்துராஜை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |