Categories
மாநில செய்திகள்

”குற்றவாளிகளை ஆஜர்படுத்த முடியாது” நீதிபதிக்கு கடிதம் எழுதிய காவல்துறை ….!!

சீன அதிபரை வருவதால் குற்றவாளிகளை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படுவதால் ஏ கே விஸ்வநாதன் நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சீன அதிபர் , பிரதமர் மோடி சந்திப்பை ஒட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மாமல்லபுரம், சென்னையில் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 16 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 10, 11 , 12 ஆம் தேதிகளில் நீதிமன்றங்களில் ஆஜர் படுத்த வேண்டிய விசாரணை கைதிகளை ஆஜர் படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் மூலமாக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் முதன்மை அமர்வு நீதிபதிக்கு  அனுப்பி இருக்கிறார்.

அதில் 10 , 11 ,  12 ஆகிய தேதிகளில் முக்கிய வழக்குகள் என்று ஆஜர் படுத்தக் கூடிய விசாரணை கைதிகளை மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். அதே போல என்று அன்றைய தின விசாரணையில் இருந்து விலக்கு அளித்து , அன்றைய தேதி வழக்குகளை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஒரு குற்றவாளி தேடப்படும் போதும் , விசாரணைக் கைதியை நீதிமன்றத்தில் அழைத்து வரும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக் கூடிய சூழல் உருவாகும் சூழலில் இந்த மாதிரி வீடியோ கான்பரன்ஸ் விசாரணை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |