பொருளாதார சீரழிவை போக்க இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பயனற்றது என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணமாக ஆட்டோ மொபைல் வீழ்ச்சியை பார்க்க முடியும்.இதுவரை இல்லாத அளவு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பல்வேறு பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதாக தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அதன் ஒரு பகுதியாக மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை , உபரி இருப்புத் தொகையை ரூ.1.76 லட்சம் கோடி வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.
இதை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதில் , பொருளதார பேரழிவை எப்படி சரிசெய்வது என்று பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் தெரியவில்லை. ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடி பொருளாதார பேரழிவுக்கு பயன்படுத்துவது பயனற்றது என்று தெரிவித்துள்ளார்.
PM & FM are clueless about how to solve their self created economic disaster.
Stealing from RBI won’t work – it’s like stealing a Band-Aid from the dispensary & sticking it on a gunshot wound. #RBILooted https://t.co/P7vEzWvTY3
— Rahul Gandhi (@RahulGandhi) August 27, 2019