அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ், எந்தவித குறையும் சொல்ல முடியாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. எங்களிடம் இருந்து வெற்றியை யாரும் தட்டிப்பறிக்க முடியாது என்றார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, குன்னத்தூர் ஊராட்சியில் காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார்.
அக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பேசியதாவது: முதல்வர் பதவி வகித்துவரும் பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஆட்சியை சிறப்பாக வழிநடத்திவருகிறார். நதிகளை இணைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். எந்தவித குறையும் சொல்ல முடியாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. எங்களிடம் இருந்து வெற்றியை யாரும் தட்டிப்பறிக்க முடியாது.
தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றுவோம். சாதனையை சொல்வதற்கு தி.மு.க.,விடம் ஒன்றும் இல்லை. இதனால், இந்த ஆட்சியை குறை சொல்லி வருகின்றனர் என்றார்.