Categories
அரசியல் மாநில செய்திகள்

GSTயை கொடுத்துட்டு… கெஞ்சனும்… மண்டியிடனும்… கும்பிடனும்… தாறுமாறாக விமர்சித்த சீமான் …!!

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசுக்கு என்று நிதி என்று ஒன்று இருக்கிறதா ? மத்திய அரசு தனக்கென்று நிதி வருவாயை பெருக்கிக் கொள்ள ஏதாவது தொழில் ? ஏதாவது வருவாய் பெருக்கிக்கொள்ள ஏதாவது வைத்துள்ளார்களா ? மாநிலங்களின் நிதிதான் மத்திய அரசு நிதி….

இந்தியாவின் பொருளாதாரத்தை வருமானத்தை நிறைப்பதில் முதல் மாநிலம் மகாராஷ்டிரா, இரண்டாவது தமிழ்நாடு. பிறகு நான் உங்களிடம் கொடுத்துவிட்டு ஒவ்வொன்றுக்கும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், நீங்கள் தர மாட்டீர்கள் ? நாட்டை எப்படி நிர்வாகிப்பது.அப்ப வழியில்லாமல் மாநில அரசு விலையை  உயர்த்த வேண்டி உள்ளது.

நீங்கள் அந்த காசை என்னிடமிருந்து எடுத்துக் கொண்டு போய் திருப்பி கொடுப்பீர்கள் அல்லவா நீங்கள் அது எடுத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் நான் நன்றாக நிர்வாகம் செய்திருப்பேன். மத்திய அரசுக்கு ஒரு வேளையிலும் இல்லாத போது, என்னிடம் gst கொடு, அதுக்கு கொடு,இதுக்கு கொடு, நான் வச்சுப்பேன். நீ என்னிடம் கெஞ்சு, மண்டியிடு, கும்பிடு, என்னை பனி அப்பத்தான் தருவேன். இல்லையென்றால் தரமாட்டேன் அப்படியென்றால் என்ன என விமர்சித்தார்.

Categories

Tech |