Categories
உலக செய்திகள்

இது இவ்ளோ பேரையா கொன்னுருக்கு…? கோரிக்கை விடுத்த கிராமமக்கள்…. வலை வைத்துப் பிடித்த வனவிலங்கு அதிகாரிகள்….!!

80 பேர்களை கொன்று தின்ற 16 அடி நீளமுடைய முதலையை கிராம மக்களின் உதவியோடு வனவிலங்கு அதிகாரிகள் ஏரியிலிருந்து பிடித்து முதலை பண்ணை ஒன்றில் ஒப்படைத்துள்ளனர்.

உகாண்டா நாட்டின் விக்டோரியா ஏரியில் சுமார் 16 அடி நீளமுடைய 75 வயதாகும் முதலை ஒன்று வசித்து வந்துள்ளது. இந்த முதலை விக்டோரியா ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக வரும் கிராம மக்களில் இதுவரை சுமார் 80 பேர்களை கொன்று தின்றுள்ளது. இந்த முதலைக்கு அப்பகுதி மக்கள் ஒசாமா பின்லேடன் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த முதலையை விக்டோரியா ஏரியிலிருந்து அப்புறப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 2005 ல் கிராம மக்களின் உதவியோடு வனவிலங்கு அதிகாரிகள் அந்த முதலையை வலை வைத்து பிடித்துள்ளனர். அதன்பின் வனவிலங்கு அதிகாரிகள் ஒசாமா முதலையை உகண்டாவிலிருக்கும் முதலை பண்ணை ஒன்றில் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |