பொதுமக்கள் பிரார்த்தனைக்காக கூடியிருந்த தேவாலயம் ஒன்றில் திடீரென நுழைந்த முதலையுடன் செல்பி எடுத்த பாதிரியாருக்கு அமெரிக்க வனத்துறை அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தில் விக்டர் என்னும் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி வழக்கம்போல் பொதுமக்கள் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்கள். அப்போது தேவாலயத்திற்குள் திடீரென முதலை ஒன்று நுழைந்துள்ளது.
இந்த முதலையை கண்ட தேவாலயத்திலிருந்த பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தலை தெறித்து ஓடியுள்ளார்கள். ஆனால் அங்கிருந்த பாதிரியார் மட்டும் முதலையை பார்த்து பயந்து ஓடாமல் அதற்கு அருகே சென்று தன்னுடைய செல்போனில் செல்பி எடுத்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி அந்த முதலையை தேவாலயத்திலுள்ள பிரார்த்தனை செய்யும் பகுதிக்கு அழைத்துச் சென்று தன்னுடைய விசிட்டிங் கார்டையும் அதற்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து இந்த காட்சிகள் அனைத்தையும் வீடியோ எடுத்த பாதிரியார் அதனை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு அமெரிக்க வனத்துறை அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.