ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் இர்வினுக்கு அடுத்தபடியாக மற்றொரு நபர் முதலையை வைத்து சாகச நிகழ்ச்சி நடத்தி அசத்தி வருகிறார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் இர்வின் என்பவர் முதலை மனிதன் என்று அனைவராலும் வர்ணிக்கப்படுகிறார். ஏன் முதலை மனிதன் என்று அழைக்கப்படுகிறார் என்றால் இவர் சர்வ சாதாரணமாக முதலையை வைத்து சாகசம் செய்து அனைவரையும் புல்லரிக்க வைப்பார். இதையடுத்து உலகப் புகழ்பெற்ற “முதலை மனிதன் ஸ்டீவ் இர்வின்” கடந்த 2006 – ஆம் ஆண்டு காலமானார்.
இந்நிலையில் அவர் செய்த சாதனைகளை வேறு யாராவது செய்ய முடியுமா? என்று அனைவரிடத்திலும் ஒரு கேள்வி எழுந்தது. அதன்படி இந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்துள்ளார் வடக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த மேட் ரைட் (Matt Wright).
இவர் முதலைகளை வைத்து சாகச நிகழ்ச்சி செய்து அசத்தி வருகிறார். 12 அடி நீளமுள்ள ஒரு முதலையை வளர்த்து வரும் மேட்ரைட் அதன் தலையைத் மெதுவாக தடவிக் கொடுத்த பின், தான் வைத்திருந்த தொப்பியைக் காட்டுகிறார். அப்போது அந்த பிரமாண்ட பெரிய முதலை அதனைப் பிடிபிப்பதற்காக எட்டிப் பாய்கிறது. இந்த காட்சியை பார்ப்பவர்களை புல்லரிக்க வைக்கும் இந்த சாகச நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.