Categories
உலக செய்திகள்

“மெக்ஸிகோவில் பயங்கரம்!”.. முதலையின் பிடியில் சிக்கிய சகோதரி.. போராடி மீட்ட பெண்..!!

பிரிட்டனை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மெக்ஸிகோவிற்கு சுற்றுலா சென்றபோது, முதலையின் பிடியில் சிக்கி மீண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

பிரிட்டனில் பிறந்த இரட்டை சகோதரிகள் ஜார்ஜி லாரி, மெலிசா. தற்போது 28 வயதாகும் இவர்கள் மெக்சிகோவிற்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்கு பிரபலமடைந்த சர்ஃபிங் ரிசார்ட் Puerto Escondido பகுதியிலிருந்து, சுமார் 10 மைல் தூரத்தில் இருக்கும் நீரில் நீச்சல் அடித்துள்ளனர்.

அப்போது திடீரென்று பெரிய முதலை ஒன்று மெலிசாவை நீரினுள் இழுத்துச் சென்றுவிட்டது. எனவே ஜார்ஜி சிறிது நேரம் மெலிசாவை காணாததால் நீரின் அடிக்கு சென்று தேடியபோது, முதலையின் பிடியில் தன் சகோதரி இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார். உடனடியாக அவரை காப்பாற்ற நினைத்த ஜார்ஜியையும் முதலை குதறியது.

எனினும் எப்படியோ விடாமல் போராடி, முதலையை அங்கிருந்து விரட்டிவிட்டார். அதன் பின்பு மயக்க நிலையில் இருந்த மெலிசாவுடன் கரை சேர்ந்து விட்டார். இருவரின் உடல் முழுக்க முதலை தாக்கிய காயங்கள் இருந்துள்ளது. ரத்தம் வழிய கரை சேர்ந்த சகோதரிகளை அங்குள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஜார்ஜி பலத்த காயமடைந்திருந்தாலும், உயிர் தப்பிவிட்டார். எனினும் மெலிசா கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இந்நிலையில் சகோதரிகளின் பெற்றோர், சுற்றுலாவை ஏற்பாடு செய்த பிரபல பிரிட்டன் சுற்றுலா நிறுவனம் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

Categories

Tech |