Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

60 ஆண்டுகள் வரை வாழும்… புதிதாக பிறந்த 14 முதலை குட்டிகள்… பத்திரமாக பராமரிக்கும் ஊழியர்கள்…!!

வ.உ.சி உயிரியல் பூங்காவில் 14 முதலை குட்டிகள் பிறந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வ.உ.சி உயிரியல் பூங்காவில் மலைப்பாம்புகள், புள்ளிமான்கள், பெலிகான் பறவைகள் உள்ளிட்ட 540 வனவிலங்குகள் பராமரிக்கப்படுகிறது.  இதனையடுத்து அங்கு பராமரிக்கப்படும் முதலை ஒன்று முட்டைகள் இட்டுள்ளது. தற்போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இட்ட அந்த முட்டைகளிலிருந்து 14 முதலை குட்டிகள் பிறந்துள்ளது. இவற்றை பூங்கா ஊழியர்கள் தனித்தனியாக பராமரித்து வருகின்றனர்.

இது குறித்து வ.உ.சி  உயிரியல் பூங்கா இயக்குனர் செந்தில் நாதன் கூறும் போது, இந்த பூங்காவில் பிறந்துள்ள குட்டிகள் 60 ஆண்டுகள் வரை வாழும் எனவும், இவற்றை பெரிய முதலைகள் சாப்பிட்டு விடும் அபாயம் இருப்பதால் ஒவ்வொரு குட்டிகளையும் தனித்தனியாக கூண்டில் அடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது புதிதாக பிறந்துள்ள 14 குட்டிகளுக்கும் சிறு சிறு துண்டுகளாக இறைச்சி உணவு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |