ஆற்றுப் பகுதியில் முதலையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் அத்திக்குன்னா ஆறு அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆற்றில் பொதுமக்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது புதர் மறைவில் முதலை ஒன்று படுத்துக் கிடந்ததைப் பார்த்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஆற்றில் இருந்து வெளியேறி தலைதெறிக்க ஓடியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் முதலை வனத்துறையினரிடம் இருந்து தப்பி ஓடி விட்டது. இதனையடுத்து முதலையின் நடமாட்டம் ஆற்று பகுதியில் அதிகளவில் காணப்படுவதால் பொதுமக்கள் யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.