Categories
உலக செய்திகள்

அனகோண்டாவிடம் மாட்டிக்கொண்ட முதலையின் போராட்டம்… வைரலாகும் வீடியோ…!!!

பிரேசிலில் அனகோண்டாவிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் ஒரு முதலையின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரேசிலில் கெய்மன் என்ற வகை முதலையை அனகோண்டா பாம்பு ஒன்று சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டது. இவ்வாறான பெரிய வகை பாம்புகள் முதலையை பிடித்தால் அவை உயிரிழக்கும் வரை விடாது. இறந்த பின்பு, அதனை உண்ணும்.

https://www.instagram.com/reel/CgBLp2CKjzZ/?utm_source=ig_web_copy_link

ஆனால் இந்த முதலை அளவில் பெரிதாக இருப்பதால், அனகோண்டாவின் பிடியிலிருந்து தப்ப முயற்சிக்கிறது. பிடியை விடாமல் அனகோண்டாவும் முயற்சிக்கிறது. இதனை ஒரு நபர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இணையதள வாசிகளை அதிகம் கவர்ந்த இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |