பலரைத் தாக்கிய 500 கிலோ எடை கொண்ட முதலை பிடிக்கப்பட்டு அதன் அதன் தலை தனியாக உடல் தனியாக புதைக்கப்பட்டுள்ளது
இந்தோனேசியாவில் சுமார் 500 கிலோ எடையில் 14 அடி நீளமுள்ள பிரமாண்டமான ராட்சத முதலை ஒன்று சிக்கியுள்ளது. பிடிபட்ட முதலையை ஜேசிபியில் வைத்துதான் கொண்டுவர முடிந்தது. அந்த அளவிற்கு அந்த முதலை மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. இந்தோனேஷியாவில் ஏராளமானோரை கொடூரமாக தாக்கிய அந்த 50 வயது மிக்க ராட்சத முதலை பிடிக்கப்பட்டுள்ளது.
மிகவும் கூர்மையான பிளேடுகள் பொருத்தப்பட்ட வலைகளின் உதவியுடன் இந்தோனேஷியாவின் தீவு ஒன்றில் இருந்த நதியிலிருந்து அங்கு வாழும் உள்ளூர் மக்களால் இந்த ராட்சத முதலை பிடிக்கப்பட்டுள்ளது. அந்த முதலையை பிடித்த மூட நம்பிக்கை கொண்ட உள்ளூர் மக்கள் அதனை அப்படியே புதைத்தால் மீண்டும் வந்து தங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று நம்பி அதன் தலையை வெட்டி வேரு ஒரு இடத்திலும் உடலை வேறொரு இடத்திலும் குழி தோண்டி புதைத்தனர்.