முட்டை விலை கடுமையாக சரிந்தும் ஹோட்டலில் ஆம்லெட் விலை குறையவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா , கேரளா என பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் 140க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா குறித்த வதந்தியும் அதிகமாக பரவி வருகிறது. முட்டை , கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவுகின்றது என்ற வதந்தி அதிகமாக பரவி வருகின்றது.
கேரளாவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் பறவை காய்ச்சல் பரவி 20 ஆயிரம் கோழிகள் வரை அழிக்கப்பட்டன. இதனால் தமிழகத்தில் முட்டை வர்த்தகம் கடுமையாக பாதித்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2க்கும் கீழ் சென்று 1 ரூபாய் 95 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கடுமையான சரிவை முட்டை சந்தித்தாலும் ஹோட்டலில் ஆம்லெட் விலை குறையவில்லை. அதே போல சென்னையில் உள்ள கடையில் முட்டை 3.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.