Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…பணத்தட்டுப்பாடு அகலும்…நற்செய்திகள் கிடைக்கும்…!

கடக ராசி அன்பர்களே….!   இன்று பணத்தட்டுப்பாடு அகலும் நாளாக இருக்கும். நீங்கள் தேடிச் சென்ற நபர் தானே வந்து சந்திக்க கூடும். அலைபேசி வாயிலாக நற்செய்திகள் வந்து சேரும். திடீர் தனலாபம் ஏற்படும். தொழில் வளர்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு அவற்றை சமாளிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.

பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாகப் பேசுவது ரொம்ப நல்லது. வாகன வசதி ஏற்படும். அடுத்தவரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் இருந்தால் மட்டும் போதுமானது காதலர்கள் பேச்சில் கண்டிப்பாக நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |