Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…மன அழுத்தம் உண்டாகும்…நிதானம் தேவை…!

கடக ராசி அன்பர்களே …! இன்று கூட பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிட்டும் நாளாக இருக்கும். இடம் பூமியால் லாபம் கிடைக்கும். நலன் கருதி சேமிக்கவும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். யோசிக்காமல் செய்யும் காரியங்கள் கூட வெற்றியை கொடுக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் தலை தூக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.

கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் பிள்ளைகளின் செயல்களால் மன அழுத்தம் போன்றவை ஏற்படலாம். உறவினர் வகையில் உதவிகள் இருந்தாலும் அவரிடம் பேசும்போது நிதானம் இருக்கட்டும். கூடுமானவரை பேச்சில் நிதானம் இருந்தால் இன்று அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். அதே போல புதிதாக இன்று நீங்கள் கடன்கள் ஏதும் பார்க்க வேண்டாம்.

காதலர்கள் பொறுமை காப்பது ரொம்ப நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து ஆகவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிஷ்ட நிறம்:  வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |