அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை நிலையத்தில் மிக நீளமான வரிசையில் வாகனங்கள் காத்துக்கிடக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது.
அமெரிக்காவில், தற்போது ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நாட்டு அரசு, மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. எனவே, மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நியூயார்க் மற்றும் மியாமி நகர்களில் இருக்கும் பரிசோதனை நிலையங்களில் மிக நீளமான வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன. அந்த வாகனங்களில் பல மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக நீண்ட நேரமாக காத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.