காவல்துறையினர்களின் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது.
உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகின்றது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதனால் அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை மதுபான கடைகள் அனைத்தும் மூட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபான கடைகளில் மது பிரியர்கள் கூட்டமாக குவிந்துள்ளனர்.
இதனால் நேற்று காலை தொடர்ந்து மாலை 6 மணி வரை மதுபான கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது மது பிரியர்கள் அதிக அளவில் மதுபாட்டில்களை நீண்ட நேரம் காத்திருந்து வாங்கி சென்றுள்ளனர். இதனை அடுத்து மது பிரியர்களை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மதுபான கடைகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.