தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு ரிலீசில் சிக்கல் இருப்பதால் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க இருப்பதாக நேற்று கூறப்பட்டது. அதன்படி இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கிறார். பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்துள்ள நிலையி,ல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விஜய் ரசிகர்கள் வந்த வண்ணமாகவே இருக்கிறார்கள்.
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 5 வருடங்களாக நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திக்காமல் இருந்த நிலையில் தற்போது சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் விஜயை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். பிற மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடனும் விஜய் புகைப்படம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 5 வருடங்களுக்கு பிறகு விஜய் ரசிகர்களை சந்திப்பதாக அழைப்பு விடுத்ததால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.