கொரோனா தொற்று பரவும் இந்த நேரத்தில் வானில் பறந்து வந்த காகங்கள் திடீரென மர்மமான முறையில் கூட்டமாக இறந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் அருகில் நேற்று வானில் பறந்துகொண்ட காகங்கள் வந்தன.. அப்போது திடீரென்று ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக 15 காகங்கள் மயங்கி கீழே விழுந்து துடித்தன.. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து அந்த காகங்களுக்கு தண்ணீர் கொடுத்தனர். ஆனாலும் சிறிது நேரத்திலேயே 15 காகங்களும் பரிதாபமாக இறந்தன.
இது பற்றி அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்..இறந்து போன காகங்களை சுற்றி நிறைய காகங்கள் வட்டமிட்டு கரைந்துகொண்டே இருந்தன. கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் இந்த நேரத்தில் வானில் பறந்து வந்த காகங்கள் திடீரென்று மர்மமான முறையில் கூட்டமாக செத்து போனது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.